பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

0

தமிழ் சினிமாவில் பிரபலமான பல படங்களை இயக்கிய பழம் தமிழ் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் உடல்நல குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட புகழ்பெற்ற படங்கள் பலவற்றை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இவரது மகன் ஜி.என்.ஆர்.குமரவேலன் யுவன் யுவதி, வாஹா உள்ளிட்ட படங்களை இயக்கிய தற்கால இயக்குனர் ஆவார்.

90 வயதான ஜி.என்.ரங்கராஜன் உடல்நல குறைவாக இருந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here