பளையில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்

0

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு பளையின் இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 9 மற்றும் 14 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here