பல ஆண்களை திருமணம் செய்து பணத்துடன் தப்பியோடிய பெண்….!

0

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்தவர் சுனில் குமார் (29).

இவருக்கு திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமானர்.

மேலும், தன்னை ஆதரவற்றவர் என்று கூறி, சுனிலை கடந்த டிசம்பர் மாதம் திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்தின்போது, சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை கொடுத்தனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி 6 லட்சம் ரூபாய் வரை சுனிலிடம் பணம் வாங்கியுள்ளார்.

இதையையடுத்து சுஹாசினி மாயமானதாக கூறப்படுகின்றது.

சுகாசினி எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சுகாசினி, நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.

இதற்கிடையில், சுனில் குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி, தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாகவும், பொலிஸாரை நாடினால் வீணாக பிரச்சினை வரும் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.

மேலும், வெங்கடேஷை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் செல்போனிற்கு அனுப்பி அதிர்ச்சியூட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த சுனில்குமார் உடனடியாக திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை வைத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சுகாசினி 3 போரையும் வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து நகை பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதே போல வேறு யாராவது சுகாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கை இழந்துள்ளார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here