பல்லாயிரக்கணக்கானோருக்கு குடியுரிமை வழங்கிய பிரான்ஸ்

0

முன்களப்பணியாளர்களா பணியாற்றியவர்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் குடியுரிமை வழங்கிய தாகதகவல்கள் வெளியாகியுள்ளது

கொரோனா வைரஸ் பரவும் போது முன்களப்பணியாளர்களாக செயல்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குடியுரிமை அமைச்சர் மார்லீன் சியப்பா நேற்று வெளியிட்டார். “சிறப்புத் திட்டத்தின் கீழ் 16,000 பேர் பிரெஞ்சு குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர், அதில் 12,012 பேர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர்” என்று அவர் கூறினார்.

குறிப்பாக ஒருவர் பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் சிறப்பு திட்டத்தின் மூலம் அவசிய பணியில் இருப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்தால் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும் தற்போது குடியுரிமை வழங்கப்பட்ட முன்களப்பணியாளர்களில் மருத்துவம், சுகாதாரத்துறைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here