பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது பேமிலி மேன் சீசன் 2 – தமிழ் ரசிகர்கள் அதிருப்தி!

0

பலத்த கண்டனங்களை பெற்ற பேமிலி மேன் சீரிஸ் நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த தொடர் தீவிரவாதம் மற்றும் ரா புலனாய்வை மையமாக கொண்டது. இந்த தொடரின் முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த தொடர் பரவலான கவனத்தை இந்தியா முழுவதும் பெற்றது. அதனால் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. சீசன் 2

டிரைலர் கடந்த மாதம் வெளியானது. இதில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது போலவும் அதை புலனாய்வு செய்ய மனோஜ் பாஜ்பாய் வருவது போலவும் காட்டப்படுகின்றன. மேலும் சமந்தா இதில் பெண் தீவிரவாதியாக(விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்திருக்கிறார்) சித்தரிக்கப்படுவதும், அவர் இலங்கை தமிழில் பேசுவதும் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் மீறி நேற்று அந்த சீரிஸ் அறிவித்தபடி வெளியாகியுள்ளது. சீரிஸைப் பார்த்த பலரும் டிரைலரில் வருவது போலவே விடுதலைப்புலிகளை அவமதிக்கும் வகையில் பலக் காட்சிகள் அமைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அதில் தீவிரவாதியாக நடித்துள்ள சமந்தாவுக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here