பறக்கும் பைக் அறிமுகம் செய்த ஜப்பானிய நிறுவனம்

0

உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ளது.

இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.

மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும் என்று கூறப்படுகின்றது.

ஜப்பானில் இந்த பைக் விற்பனை ஆரம்பித்து விட்டதாகவும், இப்பைக்கின் சிறிய அளவை 2023 இல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும், இதன் விலை (இலங்கை மதிப்பில் 27.6 கோடி) 777,000 டொலர் எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here