பருத்தித்துறையில் வாள்வெட்டு – ஒருவர் பலி நால்வர் படுகாயம்

0

வடமராட்சி- பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது 31) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் வாள் வெட்டுடன் முடிவடைந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here