பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0

நாட்டில் நிலவும் கொரோனா ஆபத்து காரணமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெறுபேற்றுச் சான்றிதழ்கள் ஒன்லைன் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பதாருக்கு சான்றிதழ்கள் தேவைப்படின், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் 0112784537 அல்லது 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைப்பதன் மூலம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk இலிருந்து மேலதிக தகவல்களைப் பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here