பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0

பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவை, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு, நிகழ்நிலை முறைமையிலும், மின்னஞ்சல் ஊடாவும் மாத்திரம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்களின் தேவைக்கு அமைய, வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது துரித அஞ்சல் சேவை மூலமாகவோ விண்ணப்பதாரியின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

அத்துடன், ‘Exams Sri Lanka’ என்ற உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியை செயற்படுத்துவதன் மூலம், சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here