பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதிகள் அறிவிப்பு

0

க.பொ.த உயர்தரம், சாதாரண தரம் மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதிகளை கல்வியமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ளார்.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வருடம் நவம்பர் 14 ஆம் திகதியும் ,உயர்தர பரீட்சையை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதியிலிருந்து மார்ச் 3 ஆம் திகதி வரையும் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தின் கருத்துக்களை அறிந்து, மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here