பரிதாபமாக பலியாகிய 2 வயது குழந்தை…! இளைஞர் ஒருவர் கைது

0

ரொறன்ரோவில் கடந்த மார்ச் 19ம் திகதி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்ததாக பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விசாரிக்க சென்ற பொலிசாரிடம், 2 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள குழந்தையின் உடற்கூராய்வில், சந்தேகத்தை ஏற்படுத்தும் காரணங்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரொறன்ரோ பொலிசார் மே 10ம் திகதி 28 வயதான Rodrigo Flores Romero என்ற இளைஞர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

மரணமடைந்த 2 வயது குழந்தையும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ள Romero உம் நன்கு அறிமுகமானவர்கள் எனவும், ஆனால் அவர்களின் உறவு குறித்து மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here