பரசூட் பயிற்சியில் விபத்து…. பரிதாபமாக பலியான விமானப்படை அதிகாரி

0

அம்பாறை – உகண பகுதியில் உள்ள விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளது.

8 ஆயிரம் அடிக்கு மேல் பரசூட்டில் இருந்து விழும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here