பயனர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் விடுத்த எச்சரிக்கை…!

0

ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் பயனர்கள் உடனடியாக ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும்.

அவ்வாறு ஒன் செய்ய வில்லை எனின் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது.

முதலில் இது ஹேக்கர்களிடம் இருந்து வந்த போலி மெயிலாக இருக்கலாம் என பலரும் சந்தேகித்தனர்.

இந்நிலையில், இந்த இ-மெயில் உண்மையில் ஃபேஸ்புக்கில் இருந்து தான் அனுப்பப்பட்டதாக நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஃபேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதால் இவ்வாறு இ-மெயில் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

ஃபேஸ்புக் புரொடக்ட்டை ஆன் செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் நபர்கள் நீண்ட நாட்களாக கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்படுகிறது.

காரணம் அவர்கள் கணக்கை ஹேக் செய்வது மூலம் நீண்ட நபர்களை எளிதாக சென்றடையும் அபாயம் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here