பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் யார்?வெளியானது தகவல்

0

சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பையிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கழிவுப் பொருட்களுக்குள் காணப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், இந்த சடலம் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே, உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சடலம் மீதான சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here