பயணப்பெட்டியிலிருந்து மீட்க்கப்பட்ட 6 வயது சிறுவனின் சடலம்…. தாய் கைது

0
Rearview shot of a handcuffed woman isolated on white

அமெரிக்காவின் மின்னிசொட்டா மாநிலத்தின் மின்னிபோலிஸ் நகரில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

28 வயதான சிறுவனின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தில் இரத்தம் தோய்ந்திருப்பதனை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் வாகனத்தை சோதனையிட்ட போது பயணப் பெட்டியொன்றில் ஆறு வயதான குறித்த பெண்ணின் மகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சிறுவன் தொடர்பான விபரங்களையோ, மரணத்திற்கான காரணம் பற்றிய விபரங்களையோ பொலிஸார் வெளியிடவில்லை.

குறித்த சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் முதல் தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாய், சிறுவனை உரிய முறையில் பராமரிக்காத காரணத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் சிறுவன் வளர்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகனை பராமரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்த காலத்தில் சிறுவன் அதிகளவில் குழப்பங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் தீயனைப்பு படை வீரனாக வர வேண்டுமென சிறுவன் கனவு கண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தாயையும் மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here