பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு! கொழும்பு சென்ற பேருந்துகள் திருப்பு அனுப்பி வைப்பு

0

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதியில் இருந்து கொழும்புநோக்கி சென்ற இரு அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது பேருந்தில் பயணித்தவர்கள் அத்தியாவசிய தேவை நிமித்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்த தவறியுள்ளனர்.

இதனால் குறித்த பேருந்து நீர்கொழும்பு பகுதியில் வைத்து மீண்டும் வவுனியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here