பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை!

0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இதில், இலங்கையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜி.எஸ்.பி கண்காணிப்பு சுழற்சி தொடர்பிலான பின்னணிக்காக விரிவான பதிலை இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அளித்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here