பயங்கரமான கரடியிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி… திகில் அனுபவம்…

0

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஒரு வாரமாக பயங்கரமான கரடியிடம் தனியாக ஒரு நபர் சிக்கியுள்ளார்.

அலாஸ்காவில் கோடியாக் (Kodiak) பகுதியைச் சேர்ந்த அமெரிக்க கடலோர காவல் படையினரின் ஒரு குழு நேற்று ஹெலிகாப்டர் மூலமாக, Kotzebue-வில் இருந்து Nome-க்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில், ஒரு சிறிய கூடாரத்துக்கு மேல் ‘SOS’ என்ற அவசர உதவி குறிப்பை பார்த்துள்ளனர்.

அதனால், மீண்டும் அந்த வழியே திரும்பி வந்தபோது, ஒரு தனிநபர் அந்த கூடாரத்தின் மேல் நின்று, தன்னை காப்பாற்றும்படி கைகளை அசைத்துக்கொண்டிருந்தார்.
அதன் பின் உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டார்.

அவரது காலில் பலமாக அடி பட்டிருந்தது, மேலும் அவரது உடல் முழுக்க பல இடங்களில் பயங்கரமாக கீறல்களும்,காயங்களும் இருந்துள்ளன.

அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு கரடியால் தாக்கப்பட்டதாகவும், ஒரு வாரமாக அந்த கூடாரத்தில் தனியாக மாட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அந்த கரடி அங்கு வந்து அவரை கொள்ள முயன்றதாக கூறியுள்ளார்.

கடலோரக் காவல் படையினர் அவரை Nome-ல் உள்ள சிறிய விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here