பம்பலப்பிட்டி பள்ளிவாசலில் – பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் முயற்சி

0

பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிரானி பெரேரா நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி, எதிமலே வீதியைச் சேர்ந்த ஹூசேமா அப்பாஸ் கென்போய் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்று முன்தினம் (09) காலை அவரின் வீட்டிலிருந்து பெற்றோல் குண்டொன்றை எடுத்து வந்து, பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் வெடிக்கச் செய்துள்ளாா்.

அந்த பெற்றோல் குண்டு வெடிக்காமையினால் மீண்டும் வீட்டுக்குச் சென்று இன்னுமொரு பெற்றோல் குண்டுடொன்றை எடுத்துவந்து பள்ளிவாசலில் வெடிக்கச் செய்a முயற்சித்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

எவ்வாறாயினும், இராண்டாவது முறையாகவும் கொண்டுவந்து வெடிக்கச் செய்த பெற்றோல் குண்டு வெடிப்புக்குள்ளாகவில்லை என்பதுடன் சந்தேகநபர் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்க மறுப்பதாகவும் பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here