பம்பலபிட்டி தமிழ் மாணவனின் உயிரிழப்பு – உடலில் ஐஸ் போதைப்பொருள்?

0

பம்பலபிட்டி பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் 7வது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவனின் உடலில் ஐஸ் எனப்படும் போதைப்பொருள் உள்ளமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பம்பலபிட்டி – டி கிறெஸ்டர் பிரதேசத்திலுள்ள இந்த தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து, குறித்த மாணவன் கடந்த 29ம் திகதி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.

15 வயதான அகிலாஷ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் அன்றைய தினம் பாடசாலை முடிவடைந்து, முச்சக்கரவண்டியில் தனது வீட்டிற்கு வரும் காட்சி, தொடர்மாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, குறித்த மாணவன் 5வது மாடியிலுள்ள தனது வீட்டிற்கு செல்லும் காட்சியும், அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்தது.

குடும்பத்தில் ஒரே மகனான இவர், தனது தந்தை மற்றும் தாய் ஆகியோருடன், வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அகிலாஷ் தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழக்கும் காட்சியும், அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் பதிவாகியுள்ளது.

இந்த உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், அகிலாஷின் உடலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளமை குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here