பம்பலபிட்டியில் 7ஆவது மாடியிலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு      

0

கொழும்பில் 7ஆவது மாடியிலிருந்து வீழ்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரட்சர் (De Kretser Place) பகுதியிலுள்ள 7 மாடி கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து சிறுவன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டடத்தில் இருந்து வீழ்ந்த சிறுவன் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here