பனிச்சரிவில் மாயமாகிய இந்திய இராணுவ வீரர்கள்….

0

சீனாவுக்கு அருகில் உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய ராணுவ வீரர்கள் இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய மயமாகியுள்ளனர்.

இந்நிலைியல் பெப்ரவரி 8 ஆம் திகதி இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு நடடிவடிக்கைள் முடிவுக்கு வந்துள்ளன.

பெப்ரவரி 6 ஆம் திகதி இமயமலையின் உயரமான கமெங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 7 இந்திய இராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.

மீட்புப் பணிகளில் உதவ சிறப்புக் குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்டன.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.

பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக சம்பவம் நடந்த பகுதியில் கடும் பனிபொழிந்து வருகிறது.

மேலதிக நடைமுறைகளுக்காக, தற்போது 7 வீரர்களின் உடல்களும் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் உள்ள இராணுவ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here