போலாந்து நாட்டை சேர்ந்த நபர் கழுத்தளவு நிரப்பப்பட்ட ஐஸ் கட்டிகளுக்குள் 3 மணி நேரம் 1 நிமிடம் இருந்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதன்படி போலாந்து நாட்டை சேர்ந்த வலேர்ஜான் ரோமானோவ்ஸ்கி, ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் இருந்து, நீண்ட நேரம் பனிக்கட்டியால் முழு உடலையும் மூடி கின்னஸ் சாதனை படைத்தார்.
லித்வானியா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
கின்னஸ் குழுமம் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
இதற்காக அவர் 6 மாதங்கள் வரை பயிற்சி எடுத்துள்ளார்.
தினமும் பயிற்சியில் 90 நிமிடங்கள், அதாவது ஒன்றரை மணி நேரம் ஐஸ் கட்டிகளுக்குள் இருந்து பயிற்சி பெற்றேன் என்கிறார்.
மேலும், என்னுடைய இந்த சாதனையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அறக்கட்டளை ஒன்றின் தூதுவராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
அவர் தனது அடுத்த சாதனையாக மைனஸ் 170 டிகிரி குளிரில் சைக்கிள் ஓட்டி சாதனை படைக்க திட்டமிட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்.