பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் விபத்துக்கள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து இன்று காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.