பதவி விலகும் மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு சபை

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு சபை பதவி விலக தீர்மானித்துள்ளது

சபையின் உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் நடைபெற்ற பின் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட நாமல் ராஜபக்ஷ பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

மேலும் தேசிய விளையாட்டு சபைக்கான புதிய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அரவிந்த டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜனவரி மாதம் அக்குழுவிலிருந்து மஹாநாம விலகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here