பதவி விலகினார் மகிந்த – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

0

மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச, பதவி விலகுவதாக தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ள நிலையில், அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் ஆளுகையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காலி முகத்திடலில் இடம்பெற்ற மோதலின்போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக குழுவொன்று கூடியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here