பதவியை இராஜினாமா செய்யும் கெஹலிய?

0

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதற்காகப் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாதத் திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அசௌகரியத் திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான தகராறு காரணமாகப் பிரசன்ன குணசேன தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்திகள் வெளியான.

நேற்றுவரை கெஹலிய ரம்புக்வெல்ல அணி வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நிலைமை மாறி யுள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here