பண்டிகைக் காலத்திலும் மின்வெட்டு அதிகரிப்படுமா?

0

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

இந்த வார இறுதியிலும் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஒரு வாரமாக துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு ஒரு தொகையை செலுத்துவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை வரை திட்டமிடப்பட்டுள்ள ஆறரை மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கும்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஒருவர் இல்லாதது பெரும் கவலையளிப்பதாகவும், தற்போதைய மின்சார நெருக்கடியிலிருந்து மீள பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால், அப்பதவிக்கான நியமனத்தின் முக்கியத்தும் தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here