பண்டாரவெல பஸ் தரிப்பிடத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்

0

பண்டாரவெல பிரதான பஸ் தரிப்பிடத்தில் நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள இருக்கை ஒன்றில் மயங்கி விழுந்திருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் 1990 நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, வைத்தியசாலையில் குறித்த நபருக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட் தொற்று இல்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது மயக்க நிலை ஏற்பட்டு அவர் இவ்வாறு மயங்கி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் பண்டாரவெல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here