பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள சுவிஸ் அரசு

0

சுவிஸ் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு வருவது இன்றே கடைசி என சுவிஸ் அரசு கூறியுள்ளது.

அதாவது, சில நாடுகள், வார இறுதியில் இரண்டு நாட்கள் ஓய்வு அளிப்பதற்கு பதிலாக, மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கத் ஆரம்பித்துள்ளது.

அதனால், மீதமுள்ள பணி நாட்களில் சிறந்த முறையில் பணியாளர்கள் உற்பத்தியை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணியில் திருப்தியை பெறுவதாகவும் (production and staff contentment) நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சுவிட்சர்லாந்திலும் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்ற முறைமையை அமுல்படுத்த பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அடுத்த வாரத்திலிருந்து அந்த நடைமுறையை அமுல்படுத்தவுள்ளது சுவிஸ் அரசு.

இந்த அறிவிப்புக்கு பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

இவ்வாறு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி செய்வதால், ஊதியத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என அரசு உறுதியளித்துள்ளது.

இதற்கு முன் பணியாளர்கள் பெற்று வந்த அதே ஊதியம், எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து அளிக்கப்படுவதை புதிய சட்டம் ஒன்று உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here