பணயப்பொதியில் இளம் பெண்ணின் சடலம் தொடர்பில் வெளியாகிய தகவல்…!

0

இலங்கையில் இளம் பெண்ணின் லையற்ற உடலை பொதியிட்டு கொழும்பு டாம் வீதிக்கு கொண்டு வந்து வீசிச் சென்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேகநபர் புத்தள காவல்துறையை சேர்ந்த உதவி பரிசோதகர் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகவலை காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளம் பெண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போனதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் அவரின் உடலம் ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் இட்டுச் செல்லப்பட்டமை சீசீடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டது.

காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here