தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
அவற்றை பர்ஸ் அல்லது பணப்பையில் வைத்திருப்பதால் பணம் தங்கும் என நம்பப்படுகிறது.
பர்ஸ் தோலினால் ஆன பர்ஸாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
லெதர் பர்ஸில் சில பொருட்களை வைத்தால் அன்னை லட்சுமிக்கு கோபம் வரும் என சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
தாமரையின் விதையை பர்ஸில் வைத்துக்கொண்டால் பணம் தனங்கும்.
அன்னை லக்ஷ்மி தேவிக்கு தாமரை மிகவும் பிரியமானதாக இருப்பதால், லட்சுமி தேவியின் அருள் பொழியும் என நம்பப்படுகிறது.
இது உங்களுக்கு நிதி வரவையும், மன அமைதியையும் தரும்.
உங்கள் பர்ஸில் ஒரு சிறிய ஸ்ரீ யந்திரத்தை வைத்திருப்பதன் மூலம், உங்களிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும்.
இது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.
பர்ஸில் 7 கோமதி சக்கரங்களை வைத்திருப்பது செல்வம் தரும்.
இதனால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்படாது.
விஷ்ணு அரச இலைகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பகவானின் அருள் இருந்தால், அன்னை லக்ஷ்மியின் அருள் கிடைக்க தாமதம் ஆகாது.
எனவே, ஒரு அரச இலையை கங்கா நீரில் சுத்தம் செய்து, அதை உங்கள் பர்ஸில் சுத்தமாக வைத்திருங்கள்.