பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடி விபத்து….. 7 பேர் பலி!
இந்தியாவின், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் உன்னா மாவட்டத்தின் பதூ என்ற பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியாருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசு தொழிற்சாலையொன்று இயங்கி வந்துள்ளது.
இதில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தொழிலாளார்கள் இன்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்து பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புக் குழுவினர், காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலை முறையைான அனுமதியின்றி சட்டவிரோதமாக செயற்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.