பட்டப்பகலில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்…

0

பிரித்தானியாவில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் மாணவன் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் கல்லூரி வளாகம் அருகிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தகவல் அறிந்து பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உறவினர்களுக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் 18 வயது மில்டன் கெய்ன்ஸ் கல்லூரி மாணவர் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here