படப்பிடிப்பில் விபத்து… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகர்!

0

மலையாள நடிகரான பஹத் பாசில் மலையன்குஞ்சு படத்தின் படப்பிடிப்பின் போது தவறி விழுந்து இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் ’மலையன்குஞ்சு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கர்ணன் படத்தின் கதாநாயகி ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பஹத் தவறி விழுந்ததில் அவருக்கு மூக்கில் அடிபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here