படப்பிடிப்பின் போது தலையில் காயமடைந்த இயக்குனர் சேரன்!

0

ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சேரன் கீழே விழுந்து காயமடைந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவாத்மிகா நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிந்தது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சேரன் கீழே விழுந்து காயமடைந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டதாம். தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால், சிகிச்சை முடிந்த கையோடு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்தாராம் சேரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here