உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனில் (Kherson), பிறந்து சில வாரங்களே ஆன குழந்தை மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உட்பட குடும்பத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ரோந்து வீரர் ஒலெக் ஃபெட்கோ (Oleg Fedko), ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தனது குடும்பத்தை அங்கிருந்து பத்திரமாக அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.
ஆனால், அவர் தனது பணியில் இருந்தபோது இந்த சோகம் ஏற்பட்டது.
Oleg Fedko தந்தை (அவரது பெயரும் ஓலெக் ஃபெட்கோ) ரஷ்யா படையெடுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதற்காக குடும்பத்தை இரண்டு கார்களில் வெளியேற்ற முயற்சித்துள்ளார்.
குடும்பத்தினர் அனைவரும் காரில் இருந்த நிலையில், அப்போது, Oleg Fedko தனது அம்மாவுடன் போன் காலில் லைனில் தான் இருந்துள்ளார்.
அப்போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில், இரண்டு தாத்தா, பாட்டி, ரோந்துகாரரின் மனைவி இரினா, ஆறு வயது மகள் சோஃபி மற்றும் பிறந்து சில வாரங்களே ஆன இவான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.