பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறிக்கும் கொரோனா

0

உலகளவில் கொரோனா தொற்றானது பல உயிர்பலிகளை காவு கொண்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பெரும்பாலான நாடுகளில் தற்போது 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும் ஆபத்தானது என்றும் கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.

இதனால் வயதான பெரியவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதுடன் இவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால், அதிக ஆபத்தும் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தடுப்பூசி போடுவது, சிகிச்சை அளிப்பது போன்றவற்றில் முதியவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

தற்போது, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகின்றது.

பிரேசிலில் கொரோனாவால் குழந்தைகள் இறப்பது அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்களே தெரிவித்துள்ளனர்.

பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பையுமே இந்த தொற்று தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை கொரோனா பரவத் தொடங்கிய நாள்முதல் இப்போதுவரை 832 குழந்தைகள் தொற்றினால் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் எல்லாருமே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here