பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசும் தாய்…

0

அமெரிக்காவில் Michael Green, Hector Jesso மற்றும் April Meadow என்னும் மூவரும் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளை சோதித்த போது ஏதோ முனகல் சத்தம் கேட்டுள்ளது.

குறித்த பை ஒன்றிற்குள் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார்கள்.

உடனே, அவர்களில் ஒருவரான April என்றபெண், கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக்கொண்டிருக்கிறார்.

மீட்புகுழுவினருடன் வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த அழகான ஆண் குழந்தை, தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல், சுமார் ஆறு மணி நேரம் கடுங்குளிரில் கிடந்துள்ளது.

குழந்தைக்கு ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினை பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அதற்கு இரத்தம் ஏற்றி, குழாய் மூலம் உணவும் ஆக்சிஜனும் செலுத்தி, சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியது யார் என்பது தொடர்பில் CCYV கமெராவைப் பரிசோதிக்கும்போது,

காரில் வந்த இளம்பெண் ஒருவர் ஒரு பையை குப்பைத் தொட்டியில் வீசுவது தெரியவந்துள்ளது.

பொலிசார் அந்தப் பெண்ணைத்தேட, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசியது Alexis Avila (18) என்ற இளம்பெண் என்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here