இந்தியா – சென்னை, விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் பயணித்த பேருந்தில் கைவிடப்பட்டிருந்த குழந்தையொன்று காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் அக்கைக்குழந்தையை கைவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், குழந்தையை மீட்ட காவல்துறையினர் தனியார் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பிறந்து 4 நாட்களேயான கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர், இருக்கை இல்லாததன் காரணமாக, இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணொருவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் பேருந்தில் இருந்து திடீரென இறங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், கைக்குழந்தையுடன் இறங்கிய பயணி குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
குழந்தையை பொறுப்பேற்றுக்கொண்ட காவல்துறையினர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் குழந்தைகள் நல குழுவினரிடம் அதனை ஒப்படைத்தனர்.