பசி கொடுமையில் நாய் இறைச்சியை உட்கொள்ளும் நாய்கள் – கொழும்பில் நடந்த கொடூரம்

0

கல்கிசை – கல்தேமுல்ல பிரதேசத்தில் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் நாய்களுக்கு அதன் உரிமையாளர் போதுமானளவு உணவு வழங்குவதில்லையென பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மிருகவதை அமைப்பொன்று அவ்விடத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளது.

அதன்போது அவ்விடத்தில் மரித்திருந்த நாயொன்றை ஏனைய நாய்கள் உட்கொள்ளும் காட்சியை கண்ட குறித்த அமைப்பினர் அதனை தமது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.

அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட காணொளியொன்று எமது செய்திப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here