பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட வழிபாடு

0

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது.

கலாநிதி யோகராஜன் அறக்கட்டளை அமைப்பின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில், இன்று (08) பாராளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ள பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது.

இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்ஷவிற்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தீவிர நிலை காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here