பதுளையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இன்று மீண்டும் விபத்து

0

பசறை – தொழும்புவத்தை – 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் வந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் அதில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவல் நிலையத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு 5 கிலோ மீற்றர் தூரத்திலேயே இந்த இன்றைய விபத்தும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here