நோர்வேயில் அம்புத் தாக்குதலில் ஐவர் பலி – தாக்குதலை மேற்கொண்டவர் கைது

0

நோர்வேயில் அம்புத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயில் நேற்றிரவு(13) மேற்கொள்ளப்பட்ட அம்புத் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நோர்வேயின் Kongsberg நகரின் பல்வேறு இடங்களில் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தாக்குதலில் காயமடைந்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அம்புத்தாக்குதலுக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here