நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுமா சீரக தண்ணீர்?

0

சீரகத் தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. எடை குறைக்க சீரகத் தண்ணீர் ஆரோக்கியமான வழியாகும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

சீரக தண்ணீர் தயாரிக்க:

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் சீரகத் தண்ணீரை வெகு சுலபமாகத் தயாரிக்க முடியும். ஒரு கையளவு சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து கொதிக்க விடுங்கள். பின்னர் அந்த நீரை வடிகட்டினால் அதுவே சீரகத் தண்ணீர். ஒரு நாளைக்குத் தேவையான அளவு இந்த நீரை இப்படி கொதிக்க வைத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம்.

எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தைப் பெற சிறந்த பானமாக இது பயன்படுகிறது. அதிகப்படியான உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கும், தட்டையான வயிற்றைப் பெறுவதற்கும், இந்த பானத்தை முயற்சிக்கலாம்.

சீரகத் தண்ணீரானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

சீரகத் தண்ணீரானது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதிலும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சீரகத் தண்ணீரை தவறாமல் உட்கொள்வது ஆழமான தூக்கத்தை ஊக்குவிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here