நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் அறிவுரைகள் என்ன…?

0

காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் வாதம், பித்தம் ஆகிய நோய்களின்றி வாழலாம். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும், இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்க்கும் அன்றாட நடைமுறைகள் ஆகும்.

பசித்து உணவு உண்ணவேண்டும். சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவேண்டும். மலம் ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் அடக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது.

அளவுக்கு அதிகமான உப்பு நோயைத் தருவாதகும். காலையிலும் மாலையிலும் நடைப்பயிர்ச்சி மேற்கொண்டால் மருத்துவமனை நோக்கி நடப்பதை பெரும் அளவில் தவிர்க்கலாம். உணவு வகைகளில் சோற்றைக் குறைவாகும் ,அதிகமாக கீரைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

கீழ்க்கண்ட வேண்டாத மன உணர்வுகள் நீக்குவது நல்லது. காமம், பகை, பிறர்க்கு உதவாமை, நான் என்னும் கர்வம், இருமணப் பெண்டிர் மீது பெரு விருப்பு, மனதளவில் விரோதம், பிறரை இகழ்தல், பொறமை ஆகியவை.

உணவுக்கு பின் வெற்றிலை, பாக்கு,சுண்ணாம்பு ,சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது வெற்றிலை உணவை விரைவாக செரிக்க செய்யும். பாக்கு நுரையிரலில் ஏற்படும் சளிதொல்லையை தீர்க்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும். அதிக அளவு நீர், கீரை வகை உணவுகளும், பழவகைகளும் மலச்சிக்கலை தீக்கும்.
நாட்பட்ட உணவை உண்ணக்கூடாது. நண்பகலில் தூக்கம் ,இரவில் விழித்துஇருத்தல் நோயை விருந்து வைத்து அழைப்பதாகும். தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here