நோயாளிகளால் நிரம்பியுள்ள IDH வைத்தியசாலை!

0

தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அந்த மருத்துவமனையினது சிகிச்சை பிரிவின் அதிகபட்ச கொள்ளளவை தற்போது எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 891 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறதியானது.

இதன்படி, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து மூவாயிரத்து 654 ஆக உயர்வடைந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் மேலும் 17 பேர் கொவிட்-19 தொற்றினால் நேற்று முன்தினம் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 330 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, 11 ஆயிரத்து 784 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here