நேரலையில் குழந்தையுடன் செய்தி வாசித்த அமெரிக்க பெண்!

0

அமெரிக்காவின் Wisconsin மாகாணம் Milwaukee நகரைச் சேர்ந்தவர் Rebecca Schuld.

இவர் அமெரிக்காவின் பிரபலமான ஊடகத்தில் வானிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக அவர் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல தொலைக்காட்சி நேரலையில் வானிலை அறிக்கையை வாசிக்க தொடங்கியுள்ளார்.

அப்போது திடீரென தனது மூன்று மாத குழந்தையின் அழுகுரல் Rebecca-வுக்கு கேட்டள்ளது.

அதன் பின் தனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வானிலை அறிக்கை நிகழ்ச்சியை தொகுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது Rebecca குழந்தையுடன் செய்தி வாசிக்கும் புகைப்படம், வீடியோ சமூக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்சம்பவம் குறித்து Rebecca தெரிவிக்கையில்,

வானிலை அறிக்கையை தொகுத்து வழங்க வேண்டும் என்பதற்காக சிறிது நேரத்துக்கு முன்புதான் எனது குழந்தையை தூங்க வைத்தேன்.

ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு சில நொடிகளே இருந்த போது அவள் எழுந்துவிட்டதால் நேரலை நிகழ்ச்சியில் அவளை தூக்கிக் கொண்டு செய்தி வாசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here