நெல்லியடி வெதுப்பக பணியாளர்களுக்கு கொரோனா !

0

நெல்லியடியில் உள்ள சுபாஸ் வெதுப்பகத்தின் பணியாளர்கள் 11 பேருக்கு நேற்று(13) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வெதுப்பகத்தில் பணியாற்றும் ஒருவருக்குச் சில தினங்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து அந்த வெதுப்பகம் மூடப்பட்டதுடன், அங்கு பணியாற்றியவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகள் நேற்று கிடைத்துள்ளன.

நெல்லியடிப் பகுதியில் உள்ள இந்த வெதுப்பத்துக்கு நாளாந்தம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தொற்று பலருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here