நுவரெலியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரக் கொலை..

0

நுவரெலியா- பூண்டுலோயா, பழைய சீன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் ஆயுதமொன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், தனிப்பட்ட தகராரே கொலை இடம்பெறுவதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம், வீட்டின் சமயலறையில் துணிகளால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here